Wednesday, July 3, 2019

ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளிய காமாட்சி சிந்தாமணி

ஸ்ரீ காமாட்சி சிந்தாமணி

பொன்மின்னு மேனியில் பொலிவுற்ற நகைபல

பொருந்த நீ வந்து நின்றாய்

அன்பற்று உன்னடி அண்டினோர் அகத்தில்

அருகினில் அமர வந்தாய்

இன்புற்று வாழ்ந்திட இனியநற் சுகங்களை

இன்று நீ இங்கு தந்தாய்

உன்பற்று கொண்டவர் உண்மையாய் உயர்ந்திட

உடனோடி யோடி வந்தாய்

கன்னலின் மொழியாளே களிதந்த விழியாளே

கற்பகச் சோலை கிளியே

கடலாடு சென்னையில் கவிபாடி நின்றிடும் கருணை காமாட்சி தாயே

1 comment:

S.Muruganandam said...

கமலை பராசக்தி மாலை
காப்பு
திருவார் கமலைத் திகழ்யோக பீடஞ் செழித்து வளர்
உருவர் யருவ முபயமுமாகும் உயர் பரை தான்
மருவார்வத்தால் நற் பராசக்தி மாலை வழுத்தி உய்ய
அருள் நாளும் நல்குவன் வாதாபிவாரண ஐங்கரனே.

திருவும் வெண்தாமரைச் செல்வியுமாகிச் சிவனிடத்தில்
மருவும் உமையாய் மகேஸ்வரியாகி மனோன்மணியாய்த்
தருபரையாய் உன்சரணே சரனெண்றும்சாரும் அன்பர்
பருகும் சிவானந்தமே தென்கமலைப் பராசக்தியே - 1

உன்னை தியானிக்க மெய்ஞானமேனியும் உண்மை அன்பால்
பன்னித் துதிக்க திருநாமமும் பல பக்தி செய்ய
மன்னித் திகழ் கோயிலும் கொண்டு யெமையாள் மனோன்மணியே!
பன்னித்திள நகைத்தாயே! கமலைப் பராசக்தியே - 2

புத்தகக் கையும் பளிங்கொளிர் மாலை புனை கரமும்
அந்தமிரண்டில் வரதாபயமும் அணிபலவும்
மொய்த்த சரத் சந்திர மேனியுமாய் உன்னை உன்னுமுயர்
பக்தருக்கு வித்தையை நல்கும் கமலைப் பராசக்தியே – 3

திருப்பாற் கடல் நடுமாமணித் தீவிற் செனித்த கற்பகத்
தருப்பால் நெருக்கிய வேலியின் நாப்பண்தழை கதம்ப
விருப்பாரணியச் சிந்தாமணி மாளிகை மேவும் சிவப்
பருத்தாள் மணி மஞ்சம் வாழும் கமலைப் பராசக்தியே -4


செக்கச்சிவந்த திருமேனியும் இடச் செம்மலர்கை
ஒக்கற் செறிய வலக்கர மலரொளிரத்தி
தக்க யோகாசன மாயோக பீடத்தில் சார்ந்து அமலன்
பக்கத் தமர்ந்தவளே! கமலைப் பராசக்தியே - 5

அரனார்க்கு இலங்கணியேது? உருவேது? திசையதுமேது?
உரமாந் தொழிலைந்துமேது? இன்பமேதரி ஒண்படையுந்
தரமாம் மனைவியும் ஏது? இல்லை நீ எனில் தற்பரையே
பரனாரை யாரறிவார் தென்கமலைப் பராசக்தியே - 6

தூண்டிய சோதியணையாய் நின்பாதம் தொழுபவர்க்கு
வேண்டிய யாவையும் வேண்டுமளவில் மிகவருள்வோய்
ஈண்டிய வல்வினை யெல்லா மகற்றும் இறைவி செல்வப்
பாண்டியன் மாமகளாகும் கமலைப் பராசக்தியே - 7

உயிரே! உயிரிணுணர்வே! உணர்வு உணர ஒண்ணாச்
செயிர் தீர் சிவமே! சிவவறிவே! அச்சிவவறிவின்
அயிராதெழும் பரமானந்தமே! அவ்வானந்தம்மார்
பயிரே நிகர் பத்தி தந்தாள் கமலைப் பராசக்தியே - 8

அல்லியங் கோதை நல்வன் மீகநாதருக்கார்ந்த கொண்டி
மெல்லியல் பாகம் பிரியாள் நன்பா லொத்த மென்மொழியாள்
நல்ல தியாக வினோதருக்காகி நலமருளிப்
பல்லியல் நாமம் பெறுவாள் கமலைப் பராசக்தியே - 9

காலைத் தினகரன் அன்ன செம்மேனியுங் கையிற்பற்றும்
மாலைச் சிலையும் நற்பாசாசாங்குசமும் மலர் கணையும்
சேலைப் பொருள் அருள் நோக்கும் கத்தூரித் திலகமுமாய்
பாலைக் கடுத்த உருவள் கமலைப் பராசக்தியே - 10

*****